search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகர்கோவில் கொள்ளை"

    • பிடிபட்ட நபர்கள் மீது தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்தது.
    • இதையடுத்து புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து குமாரியை தக்கலை மகளிர் ஜெயிலிலும், குமாரவேல், மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.

    கிள்ளியூர்:

    புதுக்கடை பகுதியில் உள்ள ஒரு கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டிருந்தனர். விழா நடந்து கொண்டிருந்த போது, கூட்டத்தில் நின்ற ஒரு பெண்ணின் கழுத்தில் கிடந்த செயினை திருடியுள்ளனர். அந்த பெண் கூட்டத்தில் சத்தம் போட்டவுடன் பொது மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செயின் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை சுற்றி வளைத்து பிடித்தனர். உடனடியாக அந்த நபர்களை புதுக்கடை போலீசில் ஒப்படைத்தனர்.

    புதுக்கடை போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் சென்னை, கொளத்தூர் பகுதி தங்கராஜ் மகன் குமாரவேல் (48), குமிடிபூண்டி பகுதி சந்தியா மகன் மணிகண்டன் (37), அதே பகுதி குமாரவேல் மனைவி குமாரி (40) என தெரிய வந்தது.

    இவர்களுடன் வேறு சிலரும் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 3 நபர்களும் பொது மக்களிடம் மாட்டிய உடன், கிடைத்த நகையுடன் மற்றவர்கள் மாயமானதாக தெரிகிறது.

    போலீசார் மேலும் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் தமிழகத்தின் பல பகுதிகளில் நடக்கும் பிரமாண்ட விழாக்கள், பொதுக்கூட்டங்களில் இது போன்று கைவரிசை காட்டுவது தெரிய வந்துள்ளது.

    மேலும் பிடிபட்ட நபர்கள் மீது தமிழகத்தில் பல காவல் நிலையங்களில் நகை திருட்டு தொடர்பாக வழக்கு பதிவாகியுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து புதுக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து குமாரியை தக்கலை மகளிர் ஜெயிலிலும், குமாரவேல், மணிகண்டன் ஆகியோரை நாகர்கோவில் ஜெயிலிலும் அடைத்தனர்.

    இதற்கிடையில் சம்மந்தப்பட்ட கோவில் விழாவில் கலந்து கொண்ட பைங்குளம், முக்காடு பகுதியை சேர்ந்த சிறிய பிள்ளை மனைவி தெரசம்மாள் (55) என்பவர் அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க செயின் விழா கூட்டத்தில் மாயமானதாக புதுக்கடை போலீசில் புகார் செய்துள்ளார்.

    கொல்லங்கோடு அருகே நடந்து சென்ற பெண்ணை தாக்கி 9 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே பாலவிளையை அடுத்த கருப்பனாவிளையைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி. இவரது மனைவி கலா ஜெயந்தி (வயது 42).

    இவர், நேற்று மாலை வீட்டில் இருந்து அந்த பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். புன்னமூட்டு கடை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் கலாஜெயந்தியின் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்தனர்.

    அப்போது கலாஜெயந்தி செயினை பிடித்துக்கொண்டார். கொள்ளையர்களுடன் கடுமையாக போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் கலாஜெயந்தியை சரமாரியாக தாக்கினார்கள். பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறித்து விட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து கொல்லங்கோடு போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். கலாஜெயந்தியிடம் கொள்ளையர்கள் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதையடுத்து சி.சி.டி.வி. கேமிராவின் காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    பூதப்பாண்டி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதியில் முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜைகள் நடைபெற்ற பின்னர் பூசாரி கோவில் நடையை பூட்டிவிட்டு சென்றார்.

    பின்னர் மறுநாள் காலையில் வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் கோவிலினுள் புகுந்த கொள்ளையர்கள் முத்தாரம்மன், முத்தீஸ்வரர் சன்னதிகளின் பூட்டை உடைத்து சாமி, அம்மன் சிலைகளில் இருந்த 2 ஜோடி கம்மல், ஒரு ஜோடி பொட்டு, ஒரு ஜோடி மூக்குத்தி உள்பட ஒரு பவுன் தங்க நகைகள் மற்றும் 8 வெள்ளி காப்புகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கைரேகை நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அம்மன் சன்னதி, சாமி சன்னதியில் பூட்டு உடைக்கப்பட்ட இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டனர்.

    அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளதா எனவும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ஈத்தாமொழி அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
    நாகர்கோவில்:

    ஈத்தாமொழி வடக்கு சூரங்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கநாடார் (வயது 49). தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று காலையில் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் மரவேலைக்கு சென்றிருந்தார். பின்னர் இரவு அவர்கள் வேலை முடிந்து வீடு திரும்பினர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதனை கண்டுஅதிர்ச்சி அடைந்த தங்கநாடார் ஈத்தாமொழி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் மாரி முத்து மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் வீட்டினுள் சென்று பார்த்த போது, அங்கிருந்த மர பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் சிதறி கிடந்தது.

    மேலும் 1½ பவுன் எடையுள்ள தங்க செயின், ½ பவுன் மோதிரம் ஆகியவையும் மற்றொரு பீரோவில் இருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்க பணம், மேஜையில் இருந்த செல்போன், சமையல் அறையில் இருந்த மின்சார அடுப்பு ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது.

    கைரேகை நிபுணர்களும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், மரபீரோ ஆகிய இடங்களில் பதிவான கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையர்களின் 2 கைரேகை சிக்கியது.

    இந்த கைரேகைகளை வைத்து பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிரா உள்ளதா? அதில் கொள்ளையர்களின் உருவம் பதிந்துள்ளதா? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்த பகுதியில் போலீசார் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர். சந்தேகம் படும்படியாக சுற்றி திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    புதுக்கடை அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுக்கடை:

    புதுக்கடையை அடுத்த செட்டியார் வளாகம் பணங்கால முக்கு பகுதியில் முத்தாரம்மன் கோவில், பத்தி ரேஷ்வரி அம்மன் கோவில் உள்ளது.

    சம்பவத்தன்று கோவிலில் இரவு பூஜைகள் முடிந்த பின்னர் நடை சாத்தப்பட்டது. பின்னர் மறுநாள் பூஜை செய்வதற்காக கோவிலுக்கு நிர்வாகி வந்தார். அப்போது கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார்.

    மேலும் சம்பவம் குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் பிரேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    கோவில் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் மதிப்புள்ள 4 தங்க தாலிகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. மேலும் கோவில் முன்பு இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

    சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் கோவில் பூட்டு உடைக்கப்பட்ட இடம் மற்றும் அம்மன் சன்னதி ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையனின் ஒரு கைரேகை சிக்கியது.

    போலீசார் இந்த கைரேகையை கொண்டு பழைய குற்றவாளின் கைரேகைகளை ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் தீவிர சோதனையிலும் ஈடுபட்டனர்.

    சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த நபர்களை பிடித்து விசாரணை நடத்தினார். அந்த பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளனவா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கோவில் கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    இனையம் அருகே மாதா ஆலயத்தின் முன்பக்க கதவை உடைத்து 14 பவுன் நகை மற்றும் உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குமரி மேற்கு மாவட்ட கடற்கரை கிராமமான இனையத்தை அடுத்த சின்னத்துறையில் பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது.

    பெரியநாயகி மாதா ஆலயத்தில் தற்போது விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதற்காக ஊழியர்கள் அங்கு வேலைபார்த்து வருகிறார்கள். ஆலயத்தின் உட்பகுதியிலும், வெளியிலும் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

    ஆலயத்தில் இருந்த பெரியநாயகி மாதாவுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய நகைகள் மற்றும் ஆபரணங்கள் மாதா சிலையில் போடப்பட்டிருக்கும். இதனை ஊர் மக்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் அவ்வப்போது பார்த்து செல்வது வழக்கம்.

    ஆலயபணிகளை நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் பார்வையிட்டு வந்தனர். நேற்று முன்தினம் அவர்கள் ஆலயத்திற்கு சென்றபோது, ஆலயத்தின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த ஆலய நிர்வாகிகள் ஆலயத்தின் உள்ளே சென்று பார்த்த போது, மாதா சிலையில் அணிவிக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் மாயமாகி இருந்தது. சிலையில் மாலை, பொட்டு கம்மல், மோதிரம், வளையல் என மொத்தம் 14 பவுன் நகைகள் போடப்பட்டிருந்தது. அவை அனைத்தையும் காணவில்லை.

    மேலும் ஆலயத்தில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பணமும் திருட்டுப்போய் இருந்தது. உண்டியலில் சுமார் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணம் இருந்தது.

    ஆலயத்தில் மாதா சிலையில் போடப்பட்ட நகை மற்றும் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றது பற்றி ஆலய நிர்வாகி ஜஸ்டின் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

    சப்-இன்ஸ்பெக்டர் பழனி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களும் சென்றனர். அவர்கள் கொள்ளை நடந்த ஆலயத்தில் சோதனை நடத்தினர்.

    அப்போது மர்மநபர் ஒருவரின் கைரேகை சிக்கியது. அதன் அடிப்படையில் ஆலயத்தில் கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மண்டைக்காடு அருகே அழகன்பாறை கோவிலான் விளையைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 64). இவர், சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார்.

    திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்றபோது பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தங்க நகை, வெள்ளிப்பொருட்கள் உள்பட ரூ.25 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டுப்போய் இருந்தது.

    இதுபற்றி ராஜேந்திரன் மண்டைக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வீடு புகுந்து திருடியவர்களை தேடி வருகிறார்கள்.
    ×